| 1 comments ]


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி,தேசியகவி பாரதி.உமறு புலவர் வாழ்ந்த வீரமும்,தமிழும் கலந்த மண்ணில் பிறந்தேன்.படித்தது கணிப்பொறி.பிடித்தது தமிழ்.

2001ம் ஆண்டு முதல் கவிதைகள் எழுத ஆரம்பித்து இதுவரை மூன்று நூல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த இருவருடங்களாக சிறுகதைகளும் எழுதி வருகிறேன்.

கல்லூரி விடுதியில் விளையாட்டாக எழுத ஆரம்பித்தபோது இருந்த மனநிலை இப்போது வெகுவாக மாறி இருக்கிறது. நிறைய மனிதர்களின் சந்திப்பும், பயணங்களும், வாசிப்பனுபவமும் எழுத்தின் மீதான பார்வையை அகலப்படுத்தி இருக்கிறது.

2004ம் ஆண்டு இணையத்தில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தேன். இணையத்தால் இதயம் நனைத்து உயிரில் கலந்த நண்பர்களால் உயிர்ப்புடன் இருக்கிறது என் பயணம்.

திரட்டி.காம் நட்சத்திர பதிவாக என்னை தேர்வுசெய்ததற்கு மனமார்ந்த நன்றி. இந்த வாரம்(ஜூன் 15 - 21) தமிழுடன் தினம் பயணப்படும் பேரானந்தவாரமாக இருக்குமென்று நம்புகிறேன்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

வலைத்தளம்:

1 comments

Nundhaa said... @ June 15, 2009 7:49 AM

வாழ்த்துக்கள் நிலா - சில ஸ்வாரஸ்யமான கவிதைகளும் ஒரு சிறுகதையும் (இதுவரை நான் படித்ததில்) எழுதியதற்காகவும் ...

Post a Comment